சரும நோய் பிரச்னை, சித்தார்த்துடன் காதல், டுவிட்ரில் மகேஷ் பாபுவை திட்டுகிறார் இப்படி எத்தனையோ சர்ச்சைகள் சமந்தாவை சுற்றி சுற்றி வந்தாலும் நடிப்பில் தீவிரமாக இருக்கிறார் சமந்தா. கடந்த 2013ம் ஆண்டில் சித்தம்மா வெகெட்டோ ஸ்ரீமல்லோசிட்டு, ஜபர்தஷ், சம்திங் சம்திங், அட்டர்னடி தேரேடி, ராமய்யா வத்சாவய்யா என 5 படங்களில் நடித்தார் எல்லாமே ஹிட். தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில் நடித்தார்.
இந்த ஆண்டு அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார். லிங்குசாமி டைரக்ட் செய்கிறார். இதுதவிர விரைவில் வெளிவர இருக்கும் ஆட்டோநகர் சூரி படத்தில் நாகசைதன்யாவுடன் நடித்துள்ளார்.
மறைந்த நாகேஷ்வரராவ், அவரது மகன் நாகர்ஜூனா, பேரன் நாகசைதன்யா நடித்துள்ள மனம் படத்தில் நடித்திருக்கிறார். பெயரிடப்படா இரண்டு படங்களில் ஒன்றில் ஜூனியர் என்.டிஆருடனும் மற்றதில் பெல்லம்கொண்டா ஸ்ரீவாசனுடனும் நடிக்கிறார். ஆக இந்த ஆண்டும் சமந்தா நடித்த 5 படங்கள் ரிலீசாகிறது. அனைத்தும் பெரிய பட்ஜெட் படங்கள்.
“2014ம் ஆண்டு எனக்கு பெரிய தலைவலியாக இருக்கப்போகிறது. அதிகப்படியான பதட்டத்துடன் இருக்கிறேன். காரணம் குறைந்தது நான் நடித்த 5 படங்கள் இந்த ஆண்டு ரிலீசாகப்போகிறது.
உறங்க நேரமின்றி வேலை செய்யப்போகிறேன். அதனால் பதட்டமாகவும் இருக்கிறது. இருந்தாலும் இதை ரசிக்கிறேன் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்” என்று சமந்தா தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment